Enable Javscript for better performance
சாலையில் ஜல்லிக் கற்கள்: கிராம மக்கள் அவதி- Dinamani

சுடச்சுட

    

    திருப்பரங்குன்றத்தை அடுத்த கீழக்குயில்குடியில் சாலையின் நடுவே ஜல்லிகற்கள் கொட்டப்பட்டுள்ளதால் பாதையில்லாமல் கிராம மக்கள் அவதிபடுகின்றனர்.
    திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கீழக்குயில்குடி ஊராட்சியில் இருந்து கண்மாய்க் கரை வழியாக அண்ணா பல்கலைக்கழக மண்டல அலுவலகம் வரை சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு தார் சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது.  அதன்படி மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் எஸ்.சி.பி.ஏ.ஆர் 2016 -2017 திட்டத்தின் கீழ் புதிய சாலை அமைக்க ரூ.45 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.  
    இதையடுத்து சாலை அமைப்பதற்காக சாலையின் நடுவே ஜல்லி கற்கள் கொட்டப்பட்டதாம். கற்கள் கொட்டப்பட்டு 20 நாள்களுக்கு மேலாகியும் பணி நடைபெறாமல் உள்ளது. இதனால் கிராமத்தினர் தனக்கன்குளம், திருநகர், திருப்பரங்குன்றம் ஆகிய பகுதிகளுக்கு வர நாகமலை புதுக்கோட்டை வழியாக சுமார் 7 கிலோமீட்டர் தூரம் சுற்றி வரவேண்டிய நிலை உள்ளது.  எனவே சாலைப்பணியை விரைந்து முடிக்கக்கோரி அப்பகுதியைச் சேர்ந்த நாடாளும் மக்கள் கட்சியின் திருப்பரங்குன்றம் முன்னாள் வேட்பாளர் சாந்திபூஷன், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய ஆணையரிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தார்.
    இதுகுறித்து சாந்திபூஷன் கூறியது: சாலை அமைப்பதற்காக கற்கள் கொட்டப்பட்டு 20 நாள்களுக்கும் மேலாகிறது.  சாலையின் நடுவே கற்கள் கொட்டப்பட்டு உள்ளதால் இருசக்கர வாகனத்தில் கூட செல்ல முடியாத நிலை உள்ளது என்றார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai