Enable Javscript for better performance
பார்வையற்றோர் தின விழா- Dinamani

சுடச்சுட

    

    உலக பார்வையற்றோர் தினத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
    மருத்துவ ஆலோசனை தகவல் மற்றும் புகார் மையம் (104), தேசிய பார்வையற்றோர் இணையம் ஆகியன சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தகவல் மையத்தின் மாவட்ட மேலாளர் ஜீவராஜ் தலைமை வகித்தார்.  நிகழ்ச்சியில் பார்வையற்ற மாணவர்கள் பார்வை குறைபாட்டினால் படும் அவதிகளையும், கண்தானம் செய்வதன் முக்கியத்துவம் குறித்தும் செயல்விளக்கம் அளித்தனர். மைய அலுவலர் ஜெயபாண்டி வரவேற்றார். தேசிய பார்வையற்றோர் இணைய ஒருங்கிணைப்பாளர்கள் உலகசான்றோன், சுந்தர்ராஜன் ஆகியோர் நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.  

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai