Enable Javscript for better performance
பாலமேடு அருகே வீட்டில் தீ: ரூ.3 லட்சம் பொருள்கள் சேதம்- Dinamani

சுடச்சுட

    

    பாலமேடு அருகே வீட்டில் மின் கசிவு காரணமாக ஏற்பட்ட தீயில் ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
           பாலமேடு உள்ள முடுவார்பட்டியைச் சேர்ந்தவர் அருள். அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி வருகிறார். இவரது வீட்டில் வெள்ளிக்கிழமை மின் கசிவு காரணமாக தீ பிடித்தது. தகவலறிந்து அலங்காநல்லூர் தீயணைப்பு வீரர்கள் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
      இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த நகை, பணம் உள்ளிட்ட ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருள்கள் தீயில் கருகி சேதமடைந்தன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai