Enable Javscript for better performance
போலி ஆவணங்கள் மூலம் திருமண நிதியுதவி பெற்ற 4 பேர் மீது வழக்கு- Dinamani

சுடச்சுட

    

    போலி ஆவணங்கள் மூலம் திருமண நிதியுதவி பெற்ற 4 பேர் மீது வழக்கு

    By DIN  |   Published on : 15th October 2016 05:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரையில் போலி ஆவணங்களைத் தாக்கல் செய்து அரசின் திருமண நிதியுதவி திட்டத்தில் ரூ.25 ஆயிரம் பெற்று மோசடி செய்ததாக இரு பெண்கள் உள்பட 4 பேர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.

     மதுரை விஸ்வநாதபுரம் மருதுபாண்டியர் 3-ஆவது தெருவைச் சேர்ந்தவர் சையது சாகுல் ஹமீது (36). இவருக்கும் திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த சுல்தானா ரிஸ்வானா பானுவுக்கும் கடந்த 2009-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து ஜமாத் மூலமாக 2012-ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றுக்கொண்டு பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
     இந்நிலையில் சுல்தானா ரிஸ்வானா பானு, தனக்கு 2013-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றதாகக் கூறி, திருமண அழைப்பிதழ் உள்ளிட்ட ஆவணங்களை போலியாகத் தயாரித்து, அரசு வழங்கும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண நிதியுதவி திட்டத்தில் ரூ.25 ஆயிரம் பெற்றாராம்.
     இதுதொடர்பாக சாகுல் ஹமீது அளித்தப் புகாரின்பேரில் மதுரை மத்திய குற்றப்பிரிவு போலீஸார், சுல்தானா ரிஸ்வானா பானு, அவரது தந்தை இப்ராஹிம், தாய் சலீமா உள்பட 4 பேர் மீது வியாழக்கிழமை வழக்குப்பதிவு செய்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai