Enable Javscript for better performance
மதுரையில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி உயர்நீதிமன்ற பதிவாளர் மனு- Dinamani

சுடச்சுட

    

    மதுரையில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி உயர்நீதிமன்ற பதிவாளர் மனு

    By DIN  |   Published on : 15th October 2016 05:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரை நகரில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் உயர்நீதிமன்ற பதிவாளர் மனு தாக்கல் செய்துள்ளார்.
     அவரது மனு விவரம்: மதுரை நகரின் முக்கியப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். நகரின் முக்கியப் பகுதிகளான நேதாஜி சாலை, வன்னியன் கிணற்று தெரு, பெத்தானியாபுரம், பசுமலை, எல்லீஸ் நகர், சுப்பிரமணியபுரம் சந்தை, பெரியார் பேருந்து நிலையம், மாட்டுத்தாவணி பேருந்து நிலையம், புறவழிச் சாலை மற்றும் நேதாஜி நகர் சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அதிக அளவில் உள்ளன. எனவே நகரில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.     மனுவில், மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர், பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர், மாநகர காவல் ஆணையர், நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் உள்ளிட்டோர் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
      இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai