Enable Javscript for better performance
மழையின் நிலையைப் பொருத்தே புதிய 500 ஆழ்துளைக் கிணறுகள்: ஆணையர் திட்டவட்டம்- Dinamani

சுடச்சுட

    

    மழையின் நிலையைப் பொருத்தே புதிய 500 ஆழ்துளைக் கிணறுகள்: ஆணையர் திட்டவட்டம்

    By DIN  |   Published on : 15th October 2016 05:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வடகிழக்குப் பருமழையின் நிலையைப் பொருத்தே மதுரையில் புதிய ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் சந்தீப்நந்தூரி கூறினார்.
    வைகை அணை நீர் வரத்து இல்லாததால், மதுரையில் குடிநீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதைச் சமாளிக்க வெள்ளிக்கிழமை முதல் மாநகராட்சியில் 4 நாள்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. வடகிழக்குப் பருவமழை பொய்த்தாலும் மதுரையின் குடிநீர் தேவையை சமாளிக்க மாநகராட்சி புதிய திட்டங்களை செயல்படுத்தவுள்ளது.
      அதன்படி புதிதாக 500 ஆழ்துளைக் கிணறுகள் ரூ.15 கோடியில் அமைக்கப்படும் என மாநகராட்சி பொறியாளர் பிரிவில் கூறப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக குடிநீர் தேவையைக் காரணம் காட்டி நகரில் 2428 ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டன. ஆனால், அதில் 1982 மட்டுமே செயல்படுவதாக கூறப்படுகிறது. இதிலும் முழுமையாக 1500 மட்டுமே செயல்படுகின்றன என்கிறார்கள் அதிகாரிகள்.
       பழைய திட்டத்தை பராமரிப்பதில் மாநகராட்சி அதிகாரிகள் அக்கறை செலுத்தாமல், புதிய திட்டங்களை செயல்படுத்துவதிலும், அதற்கான நிதியை அரசிடம் பெறுவதிலுமே அக்கறை செலுத்துவதாக மாமன்ற உறுப்பினர்கள் ஆதங்கப்படுகின்றனர்.
     புதிய திட்டத்தை செயல்படுத்த, இடம் தேர்வு, அதில் நீரோட்ட பகுதி ஆய்வு, மக்கள் கருத்து கேட்பு என குறைந்தது ஓரிரு வாரங்களாகிவிடும். அதற்குள் வழக்கமான மழைக்காலமும் வந்துவிடும்.
    ஆகவே அவசரத் தேவைக்கு புதிய ஆழ்துளைக் கிணறுகள் எந்த அளவு பயன்படும் எனக் கேள்வி எழுந்துள்ளது.
     இதுகுறித்து மதுரை மாநகராட்சி ஆணையர் சந்தீப்நந்தூரியிடம் கேட்டபோது, ஆழ்துளைக்கிணறுகள் அமைப்பதில் தாமதம் ஏற்படாது. இருப்பினும் போதுமான மழை பெய்துவிட்டால்  தேவையின்றி ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்படாது என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai