Enable Javscript for better performance
ரயில்வே ஊழியர்களின் அடிப்படை ஊதியத்தை உயர்த்தக்கோரி ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    ரயில்வே ஊழியர்களின் அடிப்படை ஊதியத்தை உயர்த்தக்கோரி ஆர்ப்பாட்டம்

    By DIN  |   Published on : 15th October 2016 05:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ரயில்வே ஊழியர்களின் அடிப்படை ஊதியத்தை ரூ.18 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்ஆர்எம்யு சங்கத்தினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
     சதர்ன் ரயில்வே மஸ்தூர் யூனியன் (எஸ்ஆர்எம்யு) சார்பில் மதுரை ரயில் நிலையத்தின் மேற்கு நுழைவு வாயிலில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கோட்டத் தலைவர் ஜி.ராமசுப்பு தலைமை வகித்தார். கோட்டச் செயலர் ஜெ.எம்.ரபீக் சிறப்புரையாற்றினார். இதில், ரயில்வே ஊழியர்களின் அடிப்படை ஊதியத்தை ரூ.18 ஆயிரமாக உயர்த்த வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை பின்பற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.
     உதவி கோட்டச் செயலர்கள் வி.ராம்குமார், ரவிச்சந்திரன், சபரிவாசன், சீதாராமன், கிளைச் செயலர்கள் பாலசுப்பிரமணியன், ரவீந்திரன், முருகேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai