Enable Javscript for better performance
வெடிபொருள் வெடிப்பு: கொட்டாம்பட்டி காவல்நிலைய வளாகத்தில் மீண்டும் சோதனை- Dinamani

சுடச்சுட

    

    வெடிபொருள் வெடிப்பு: கொட்டாம்பட்டி காவல்நிலைய வளாகத்தில் மீண்டும் சோதனை

    By DIN  |   Published on : 15th October 2016 05:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி காவல்நிலைய வளாகத்தில் வெடிபொருள் வெடித்ததைத் தொடர்ந்து வேறு எங்கும் வெடிபொருள்கள்  உள்ளனவா என வெள்ளிக்கிழமையும் சோதனை நடந்தது.
      கொட்டாம்பட்டி காவல்நிலைய எல்கையில் பல்வேறு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட அமோனியம் நைட்ரேட் வெடிபொருள் காவல்நிலைய வளாகத்தில் உள்ள பாழடைந்த தண்ணீர் தொட்டியில் வைக்கப்பட்டிருந்தது. இந்த வெடிபொருள் வியாழக்கிழமை மதியம் பலத்த சத்தத்துடன் வெடித்தது. உடனடியாக காவல்துறை உயர் அதிகாரிகள் வெடிபொருள் நிபுணர்கள் அப்பகுதியை ஆய்வு செய்தனர். காவல் நிலையத்தின் குப்பைக் கழிவுப்பொருள்களை வெடிபொருள் மீது கொட்டியதால் அழுத்தம் காரணமாக வெடிபொருள் வெடித்தது தெரியவந்தது.  
     இதைத்தொடர்ந்து காவல்நிலைய வளாகத்தில் வேறு பகுதிகளில் வெடிபொருள் உள்ளதா என வெடிபொருள் ஆய்வுக் குழுவினர் சார்பு- ஆய்வாளர் சந்திரமுருகேசன் தலைமையில் மீண்டும் ஆய்வுசெய்தனர். ஆனால் வெடிபொருள் எதுவும் சிக்கவில்லை என போலீஸார் தெரிவித்தனர். இந்நிலையில் வெடிபொருள் வெடிப்பு சம்பவம் குறித்து மேலூர் காவல் ஆய்வாளர் ராமநாராயணனை விசாரிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai