Enable Javscript for better performance
வழிப்பறியில் ஈடுபட்ட மூவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    மதுரையில் வழிப்பறியில் ஈடுபட்ட மூவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
    சென்னை வண்டலூர் அனந்தநாதன் நகரைச் சேர்ந்தவர் பூமிபாலன்(51). இவர் சில நாள்களுக்கு முன்பு மதுரை வந்தார். மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் மர்மநபர்கள் சிலர் பூமிபாலனிடம் இருந்த செல்லிடப்பேசி மற்றும் பணம் ரூ.12 ஆயிரத்தை பறித்துச் சென்றனர்.
    இதுகுறித்து அண்ணாநகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையில் போலீஸ் போல் நடித்து வழிப்பறி செய்த திடீர் நகரைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன்(45) மற்றும் குமாரை போலீஸார் கைது செய்து அவர்களிடம் இருந்த ரூ.8,500 பணமும், செல்லிடப்பேசியையும் பறிமுதல் செய்தனர்.
    இதேபோல் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்தவர் சாந்தி. சில நாள்களுக்கு சிகிச்சைக்காக மதுரை வந்தார். பேருந்துநிலையத்தில் மர்மநபர்கள் சிலர் சாந்தி அணிந்திருந்த 2 பவுன் நகையைப் பறித்துச் சென்றனர். இதுகுறித்து சுப்பிரமணியபுரம் போலீஸார் விசாரித்து வந்தனர். விசாரணையில் பழங்காநத்தம் பகுதியைச் சேர்ந்த மணிவண்ணன்(19) என்பவரை பிடித்து போலீஸார் விசாரித்தனர்.
    இதையடுத்து அவரும் அவரது நண்பர் அருண்குமாரும் நகை பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. மணிவண்ணனை கைது செய்து அவரிடம் இருந்த நகையைப் பறிமுதல் செய்தனர். தலைமறைவான அருண்குமாரை தேடி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai