அலங்காநல்லூரில் உள்ள அரசுப் பள்ளியில் முதன்மைக் கல்வி அலுவலர் என்.மாரிமுத்து திடீரென புதன்கிழமை ஆய்வில் ஈடுபட்டார்.
மதுரை மாவட்டத்தில் புதன்கிழமை அனைத்துப் பள்ளிகளும் கோடை விடுமுறைக்குப் பின் திறக்கப்பட்டன. முதல் நாளில் விலையில்லாப் பொருள்களை மாணவர்களுக்கு விநியோகிக்கவேண்டும். இறைவணக்கக் கூட்டம் நடத்தப்படவேண்டும் என பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
புதன்கிழமை காலை பள்ளிகள் திறந்த ஒரு மணி நேரத்தில் விலையில்லாப் பொருள்கள் மாணவ, மாணவியருக்கு சென்றடைந்துள்ளதா என ஆய்வு மேற்கொள்ள முதன்மைக் கல்வி அலுவலர் என்.மாரிமுத்து அலங்காநல்லூர் அரசுப் பள்ளிகளுக்கு திடீரெனச் சென்றார்.
பள்ளியில் மாணவர் வருகை விவரம், ஆசிரியர்கள் வருகை விவரத்தை அவர் நேரில் ஆய்வு செய்ததுடன், சீருடைகள் உள்ளிட்ட விலையில்லாப் பொருள்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டதை உறுதிப்படுத்தினார். பள்ளி வளாகம் சுத்தமாக உள்ளதா என்று ஆய்வை மேற்கொண்ட அவர் மாணவர்களிடையேயும் விசாரித்தார். முதல் நாளிலே முதன்மைக் கல்வி அலுவலரின் திடீர் ஆய்வு ஆசிரியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.