மதுரை கே.கே.நகரில் செயல்படும் பார்வைக் குறைபாடு உடையோருக்கான அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சார்பில் நடத்தப்படும் இப்பள்ளியில் ஒன்று முதல் 6-ஆம் வகுப்பு வரை மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவர். சிறப்புப் பயிற்சி பெற்ற ஆசிரியர்களால் வகுப்புகள் நடத்தப்படும். இசை, உடற்கல்வி சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும். உணவு, சீருடை, மருத்துவம், தங்கும் விடுதி அனைத்தும் இலவசம். பெற்றோரும், தன்னார்வ நிறுவனங்களும் பார்வைக் குறைபாடு உடைய மாணவர்களை இப் பள்ளியில் சேர்க்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.