மேலூர் அருகே சாத்தமங்கலம் அருள்மிகு ஹரிகரபுத்திர சாத்தஅய்யனார் திருக்கோயில் புரவி எடுப்புத் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வைகாசித் திருவிழாவையொட்டி, இ.மலம்பட்டி கிராமத்திலிருந்து ஒரு கோயில் குதிரை, இரு கிராமக் குதிரை மற்றும் 66 பக்தர்கள் வேண்டுதல்களுக்கான குதிரை சிலைகள் ஊர்வலமாக திங்கள்கிழமை மாலை எடுத்து வரப்பட்டன. இ.மலம்பட்டியிலிருந்து கீழவளவு, சருகுவலையபட்டி தனியாமங்கலம் வழியாக சாத்தமங்கலம் கிராமத்தில் மந்தை திடலில் இரவு வைத்திருந்தனர். செவ்வாய்க்கிழமை மாலை மந்தையிலிருந்து சிலைகள் எடுத்துச்செல்லப்பட்டு சாத்தமங்கலம் கண்மாய்க் கரையிலுள்ள அய்யனார் கோயிலில் வரிசையாக வைக்கப்பட்டன. இந்நிகழ்ச்சியையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.