சட்டவிரோதமாக வெட்டிக் கடத்தி தனியார் நிலங்களில் பதுக்கி வைத்துள்ள கிரானைட் கற்களை அரசுடைமையாக்க அனுமதி கோரிய 42 வழக்குகள் மீதான விசாரணையை, ஆகஸ்ட் 2-ஆம் தேதிக்கு தள்ளிவைத்து மேலூர் நீதித்துறை நடுவர் மன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
மேலூர் வட்டத்தில் கீழவளவு, இ.மலம்பட்டி, திருவாதவூர், இடையபட்டி, மதுரை கிழக்கு வட்டத்தில் சிவலிங்கம், புதுத்தாமரைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தனியார் பட்டா நிலங்கள், அரசு புறம்போக்கு, பாசன கண்மாய்களில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கிரானைட் கற்களை அரசுடைமையாக்க அனுமதி கோரி, மதுரை மாவட்ட முன்னாள் ஆட்சியர் இல. சுப்பிரமணியன் தாக்கல் செய்திருந்த 42 வழக்குகள் மற்றும் போலீஸார் தொடர்ந்திருந்த கிரானைட் முறைகேடு தொடர்பான 9 வழக்குகள், லாரியின் ஆர்.சி. புத்தகம் கேட்ட ஒரு வழக்கும் புதன்கிழமை விசாரணைக்கு வந்தன.
கிரானைட் முறைகேடு தொடர்பான வழக்கில் நில அளவையர் முருகேசன் சாட்சியமளித்தார். இதைத் தொடர்ந்து, வழக்குகள் மீதான விசாரணையை ஆகஸ்ட் 2-ஆம் தேதிக்கு தள்ளிவைத்து, மாஜிஸ்திரேட் செல்வகுமார் உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.