மதுரை மாவட்டம், பேரையூரில் இலவச வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, புரட்சிகர தொழிலாளர்கள் சங்கம் சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மதுரை மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும். முதியோர் உதவித்தொகை வழங்குவதில் உள்ள இடர்பாடுகளை களைய வேண்டும். 60 வயது நிறைவடைந்த அனைவருக்கும் முதியோர் உதவித்தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, புரட்சிகர தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
பேரையூர் தாலுகா அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்டச் செயலர் முத்துராஜ் தலைமை வகித்தார். இதில், மாநிலச் செயலர் சுப்ரமணி சிறப்புரையாற்றினார்.
நிர்வாகிகள் ஜோதியம்மாள், சொரியம்மாள், கருப்பாயி, பாண்டியம்மாள் மற்றும் ஆறுமுகம் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.