ஹார்விபட்டியில் தனியார் பள்ளி ஓவிய ஆசிரியரைத் தாக்கிய இருவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
திருப்பரங்குன்றத்தை அடுத்த ஹார்விபட்டியில் உள்ள தனியார் பள்ளியில் வடிவேல் (43) என்பவரது உறவினரின் மகள் 7 ஆம் வகுப்பு படித்து வருகிறாராம். இம்மாணவியை பள்ளியில் இருந்து விடுவிக்கக் கோரி, மாணவியின் பெற்றோர் பள்ளி நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்தனராம். பள்ளி நிர்வாகம் மாணவியின் சான்றிதழை தர தாமதித்துள்ளது. இது தொடர்பாக வடிவேல், தமிழரசன் (38) ஆகிய இருவரும் பள்ளியின் தலைமை ஆசிரியர் கலாராணி மற்றும் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, அங்கிருந்த ஓவிய ஆசிரியர் கண்ணனை இருவரும் தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டனராம். திருநகர் போலீஸார் வடிவேல், தமிழரசன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.