மதுரை மாநகரில் 5 காவல் ஆய்வாளர்கள் புதன்கிழமை பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை மாநகர் செல்லூர் காவல் நிலைய சட்டம் ஒழுங்கு ஆய்வாளராகப் பணிபுரிந்த அய்யாத்துரை, கோயில் காவல்நிலைய சட்டம் ஒழுங்குக்கும், திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் எம். ரெஜினா கீரைத்துறை குற்றப் பிரிவுக்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஜி. மணிவண்ணன் செல்லூர் சட்டம் ஒழுங்கு பிரிவுக்கும், டி. கீதா ரமணி திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கும், ஜி. முருகேசன் சுப்ரமணியபுரம் குற்றப் பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
இதற்கான உத்தரவை, மாநகரக் காவல் ஆணையர் சைலேஷ்குமார் யாதவ் புதன்கிழமை வெளியிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.