மதுரை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மற்றும் மதுரை மெட்ரிக் ஆய்வாளர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மதுரை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலராக திருவாரூர் பகுதியைச் சேர்ந்த தலைமை ஆசிரியர் தியாகராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், மதுரை மெட்ரிக்குலேசன் பள்ளிகளின் ஆய்வாளர் பொறுப்பில் இருந்த முருகேசன் உசிலம்பட்டி கல்வி மாவட்ட அலுவலராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக மதுரை மெட்ரிக். பள்ளிகளின் ஆய்வாளராக விழுப்புரத்தைச் சேர்ந்த தலைமை
ஆசிரியர் காயத்ரிராணி நியமிக்கப்பட்டுள்ளார். புதிதாக நியமிக்கப்பட்டவர்கள் வரும் 19 ஆம் தேதி பொறுப்பேற்க உள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.