தல்லாகுளம் தபால் நிலைய வளாகத்தில் கூடுதலாக ஒரு ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையம் புதன்கிழமை திறக்கப்பட்டுள்ளது.
தல்லாகுளம் தலைமை தபால் நிலையத்தில் ரயில்வே பயணச்சீட்டு முன்பதிவு செய்வதற்கான மையம் ஒன்று செயல்பட்டு வந்தது. இந்நிலையில் கோடை விடுமுறை காரணமாகவும், பேருந்து சேவை பாதிப்பு காரணமாகவும் இந்த மையத்திற்கு பயணிகள் வருகை கடந்த சில நாள்களாக அதிகரித்தது.
எனவே கூடுதல் கவுன்டர் திறக்க வேண்டும் என்று மக்களவை உறுப்பினர் ஆர்.கோபாலகிருஷ்ணன் ரயில்வே நிர்வாகத்திடம் வலியுறுத்தியுள்ளார். இதன்படி கூடுதல் மையத்தை திறக்க மதுரைக் கோட்ட முதுநிலை வர்த்தக மேலாளர் இ.ஹரிகிருஷ்ணன் உத்தரவிட்டார். இதையடுத்து தல்லாகுளம் தலைமை தபால் நிலையத்தில் இயங்கி வந்த பயணச்சீட்டு முன்பதிவு மையம் எண்ணிக்கை புதன்கிழமை முதல் இரண்டாக உயர்த்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.