"யுவஸ்ரீ கலா பாரதி  விருது பெற விண்ணப்பிக்கலாம்'

கல்வி மற்றும் பிற துறைகளில் சாதித்த மாணவ, மாணவியர் யுவஸ்ரீ கலா பாரதி விருத்துக்கு விண்ணப்பிக்கலாம்.
Updated on
1 min read

கல்வி மற்றும் பிற துறைகளில் சாதித்த மாணவ, மாணவியர் யுவஸ்ரீ கலா பாரதி விருத்துக்கு விண்ணப்பிக்கலாம்.
 பாரதி யுவகேந்திரா நிறுவனர் நெல்லை பாலு இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இசை, கல்வி, விளையாட்டு, சமூகப்பணி, பரத நாட்டியம், பேச்சு, கவிதை, சமூகப்பணி உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கும் எல்.கே.ஜி. முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு விருது வழங்கப்படுகிறது. கல்லூரி மாணவ, மாணவியருக்கு சுவாமி விவேகானந்தர் விருதும் மாவட்ட வாரியாக வழங்கப்பட்டு வருகிறது. பாரதியார் மற்றும் சுவாமி விவேகானந்தர் திருவுருவம் பொறிக்கப்பட்ட கேடயம் மற்றும் பட்டயம், ஸ்படிக மாலை வழங்கப்படும்.
 தகுதியுடையவர்கள் தங்களது சுயவிவரக் குறிப்புகளுடன் வீட்டு முகவரி, தொலைபேசி எண்களுடன் அரிமா நெல்லை பாலு, நிறுவனர், பாரதி யுவகேந்திரா, ஜி102, சாந்திசதன் குடியிருப்பு, கோச்சடை, மதுரை-625016, (செல்லிடப் பேசி: 9442630815) என்ற முகவரிக்கு ரூ.10 அஞ்சல் வில்லை ஒட்டிய சுயவிலாசமிட்ட உறையுடன் அனுப்பிடவேண்டும் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com