மதுரையில் புதன்கிழமை தண்ணீர் லாரி மோதியதில் சாலையைக் கடக்க முயன்ற மூதாட்டி உயிரிழந்தார்.
மதுரை திருப்பரங்குன்றம் சாமியப்ப பிள்ளைத் தெருவைச் சேர்ந்த நாகரத்தினம் மனைவி வீரலட்சுமி (63). இவர் உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டு, நெல்பேட்டை பகுதியில் செவ்வாய்க்கிழமை சாலையைக் கடந்துள்ளார். அப்போது, அவ்வழியாக வந்த தண்ணீர் லாரி வீரலட்சுமி மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து வீரலட்சுமி மகள் சந்திரா (35) அளித்த புகாரின்பேரில், லாரி ஓட்டுநர் பாலமேட்டைச் சேர்ந்த நாகேந்திரன் (41) மீது நகர் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.