மதுரையில் முன்விரோதத் தகராறில் சரக்கு வாகன ஓட்டுநரை வீடு புகுந்து கத்தியால் குத்திக் கொலை செய்த ஆட்டோ ஓட்டுநரை, போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
மதுரை சுப்பிரமணியபுரம் காலனி மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த தங்கவேல் மகன் விக்ரம் (27). சரக்கு வாகன ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தார். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பாலா என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், விக்ரம் மதிய உணவுக்காக செவ்வாய்க்கிழமை பிற்பகலில் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, அங்கு பாலா உள்ளிட்ட 4 பேர் அவரைக் கத்தியால் குத்தியதில், விக்ரம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இக் கொலை தொடர்பாக விக்ரம் மனைவி பேச்சியம்மாள் (23) அளித்த புகாரின்பேரில், ஜெய்ஹிந்த்புரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். அதில், கொலையில் தொடர்புடைய பாலமுருகன் என்ற ஆட்டோ பாலாவை (35) போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.