மதுரை அருகே தோப்பூரில் உள்ள சிவானந்த தபோவனத்தில் செப்டம்பர் 10 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அந்தர்யோகம் நடைபெறுகிறது.
இது குறித்து சிவானந்த தபோவனத்தின் தலைவர் சிவானந்த சுந்தரானந்த சரஸ்வதி சுவாமிகள் கூறியதாவது: சிவானந்த தபோவனத்தில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அந்தர்யோக பயிற்சி நடைபெற்று வருகிறது. அதன்படி, செப்டம்பர் 10 ஆம் தேதி காலை குருதேவர் சிவானந்தரின் 131 ஆவது ஜயந்தியை முன்னிட்டு, அந்தர்யோக பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது.
தோப்பூரில் உள்ள சிவானந்த தபோவன வளாகத்தில் காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 4.30 மணிக்கு அந்தர்யோகம் நிறைவடையும். தபோவனத் தலைவர் சிவானந்த சுந்தரானந்த சரஸ்வதி சுவாமிகள் தலைமை வகிக்கிறார். திருவண்ணாமலை சாரதா ஆசிரமம் யதீஷ்வரி கிருஷ்ணாம்பாள் அம்பா முன்னிலையில், வழக்கமான முறைப்படி அந்தர்யோகம் நடைபெறும். பங்கேற்பவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.