சுதந்திரப் போராட்டத் தலைவர் நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ் மதுரைக்கு வருகை தந்த தினத்தை நினைவுகூரும் வகையில், புதன்கிழமை அவரது உருவச் சிலைக்கு பிரமுகர்கள் மாலை அணிவித்தனர்.
கடந்த 1939 ஆம் ஆண்டு செப்டம்பர் 6 ஆம் தேதி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மதுரைக்கு வருகை தந்து பொதுக்கூட்டத்தில் பேசினார். அவரை பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மதுரைக்கு அழைத்து வந்தது குறிப்பிடத்தக்கது. இரண்டாம் உலகப் போர் நடந்த நிலையில், நேதாஜி மதுரை கூட்டத்தில் பேசிய பிறகு, வேறு எந்த நிகழ்விலும் பங்கேற்கவில்லை. நேதாஜி மதுரை வந்த தினத்தை நினைவுகூரும் வகையில், புதன்கிழமை ஜான்சிராணி பூங்காவில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு நேதாஜி தேசிய இயக்கத் தலைவர் வே. சுவாமிநாதன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.