மதுரை சுயராஜ்ஜியபுரம் 6-ஆவது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் மகேந்திரன் (22). இவர், பி.டி. ராஜன் சாலை தாமஸ் தெரு வழியாக செவ்வாய்க்கிழமை சென்றுள்ளார்.
அப்போது, அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் மகேந்திரனிடம் கத்தியைக் காட்டி மிரட்டி செல்லிடப்பேசியைப் பறித்துச் சென்றுள்ளனர். இது தொடர்பாக மகேந்திரன் அளித்த புகாரின்பேரில், தல்லாகுளம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். இதில், தல்லாகுளம் கண்மாய் மேலத் தெருவைச் சேர்ந்த அஜித் என்ற அழகரசன்(22), பழங்காநத்தம் வடக்குத் தெருவைச் சேர்ந்த வினோத்குமார் (21) ஆகிய இருவரும் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது.
அதையடுத்து, இருவரையும் பிடித்து விசாரித்ததில், மகேந்திரன் மற்றும் சின்னசொக்கிக்குளத்தில் மருத்துவமனை நடத்தி வரும் மருத்துவர் ரவிச்சந்திரனிடமும் செல்லிடப்பேசியை பறித்துச் சென்றது தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரையும் போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.