வழக்கு செலவுக்கு பணம் கேட்டு பெண்ணை தாக்கிய இருவர் கைது

மதுரையில் வழக்கு செலவுக்கு பணம் கேட்டு பெண்ணைத் தாக்கிய இருவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
Published on

மதுரையில் வழக்கு செலவுக்கு பணம் கேட்டு பெண்ணைத் தாக்கிய இருவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
மதுரை தத்தனேரி மாநகராட்சி காலனியை சேர்ந்த சித்தானந்தம் மனைவி அமுதா (42).  இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி (44).  இவர் தனது செலவுகளுக்காக  அமுதாவிடம் அடிக்கடி கடன் வாங்கியுள்ளார். இதையடுத்து, ரூ. 50 ஆயிரம் கடன் கேட்டபோது அமுதா தர மறுத்து விட்டாராம். இதனால் ஆத்திரமடைந்த சின்னத்தம்பி,  சில மாதங்களுக்கு முன் அமுதா மற்றும் அவரது கணவரை கத்தியால் குத்தியுள்ளார்.
இதுகுறித்த புகாரின்பேரில், செல்லூர் போலீஸார் கொலை முயற்சி  வழக்குப் பதிவு செய்து சின்னதம்பியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.     இந்நிலையில், சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்த சின்னத்தம்பி,  தனது நண்பருடன் சேர்ந்து அமுதாவின் வீட்டுக்குச் சென்று வழக்குச் செலவுக்கு பணம் தரவேண்டும். வழக்கை வாபஸ் பெறவேண்டும் என்று கூறி தாக்கியுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக அமுதா அளித்த புகாரின்பேரில், செல்லூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சின்னத்தம்பி, வீரக்குமார் (29) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com