மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே கஞ்சா கடத்திய இருவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்து, அவர்களிடமிருந்து 33 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
உசிலம்பட்டி அருகே கீரிப்பட்டி பகுதியில் கஞ்சா கடத்தப்படுவதாக, உசிலம்பட்டி தாலுகா போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில், காவல் ஆய்வாளர் ராமச்சந்திரன் தலைமையில் போலீஸார் கீரிப்பட்டிக்கு சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, அப்பகுதியில் சாக்கு மூட்டையுடன் வந்த இருவரைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர்.
அதில், இருவரும் முன்னுக்குப்பின் முரணாக பேசியதை அடுத்து, அவர்கள் வைத்திருந்த சாக்கு மூட்டையை சோதனையிட்டனர். அதில், 33 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. அதையடுத்து, கீரிப்பட்டியைச் சேர்ந்த சின்னச்சாமி (45), தேவராஜ் (62) ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்து, அவர்களிடமிருந்து 33 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.