கருமாத்தூர் அருள் ஆனந்தர் கல்லூரி மாணவ, மாணவியர் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி உள்ளிருப்புப் போராட்டத்தில் மூன்றாவது நாளாக புதன்கிழமை ஈடுபட்டனர்.
உசிலம்பட்டி அருகே உள்ள கருமாத்தூர் அருள் ஆனந்தர் கல்லூரி மாணவ, மாணவிகள் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், அனிதா தற்கொலை சம்பவத்தை கண்டித்தும், 300-க்கும் மேற்பட்டோர் 3 நாள்களாக உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கல்லூரி வளாகத்துக்குள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மாணவ-மாணவியர், மத்திய- மாநில அரசுகளை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.