மதுரை பெரியார் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (செப்.7) மின்தடை ஏற்படும் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, மதுரை மின்பகிர்மான வட்டம் தெற்கு செயற்பொறியாளர் ரெ. சுஜா விடுத்துள்ள செய்திக் குறிப்பு: சுப்பிரமணியபுரம் மற்றும் மாகாளிபட்டி துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறவுள்ளன.
எனவே, இங்கிருந்து மின்விநியோகம் பெறும், தெற்குவெளி வீதி, தெற்கு மாசி வீதி, மாரட் வீதி, சப்பாணி கோயில் தெரு, காஜிமார் தெரு, காஜா தெரு, கிருஷ்ணன் கோயில் தெரு, பாண்டிய வேளாளர் தெரு, மேலவாசல், பெருமாள் கோயில் தெரு. டி.பி.கே.சாலை, மேல வடம்போக்கித் தெரு, கட்ராபாளையம், மேலவெளி வீதி, இம்மையில் நன்மை தருவார் கோயில், மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி, தெற்காவணி மூல வீதி, ரத்தினபுரம், சுந்தரராஜபுரம், எம்.கே.புரம், பெரியார் பேருந்து நிலையம், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், ஆர்.எம்.எஸ்.சாலை. கீரைத்துறை, மாகாளிபட்டி, நல்லமுத்துப்பிள்ளை ரோடு, சிந்தாமணி ரோடு, செயின்ட்மேரீஸ் பள்ளி பகுதி, பிள்ளையார் பாளையம், சின்னக்கடை தெரு, மஞ்சணக்காரத் பந்தடி, மகால் பகுதி, மறவர்சாவடி, காமராஜர்ரபுரம், வாழைத்தோப்பு, கீழவெளிவீதி, அம்மன் சன்னதி, கீழமாரட் வீதி, சுங்கம் பள்ளிவாசல் தெரு உள்ளிட்ட பகுதிகள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.