Enable Javscript for better performance
ஆசாத் ஹிந்த் சர்க்கார் பவள விழா- Dinamani

சுடச்சுட

    

    மதுரை நேதாஜி தேசிய இயக்கம் சார்பில் ஆசாத் ஹிந்த் சர்க்கார் அமைக்கப்பட்டதன் 75-ம் ஆண்டு பவள விழா சனிக்கிழமை நடைபெற்றது.
    சுதந்திரப் போராட்ட  காலத்தில் நேதாஜி சுபாஷ்சந்திர போஸ் ஆங்கிலேயருக்கு எதிராக ஆசாத் ஹிந்து அரசை அறிவித்தார். அதன் 75-ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு மதுரை ஜான்சிராணி பூங்காவில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு நேதாஜி தேசிய இயக்கம் சார்பில் மாலை அணிவிக்கப்பட்டது.
    பின்னர் நடந்த நிகழ்ச்சிக்கு நேதாஜி தேசிய இயக்கத் தலைவர் வே. சுவாமிநாதன் தலைமை வகித்து சிறப்புரையாற்றினார்.  ஐ.என்.ஏ. வீரர்கள் வாரிசுகள் சார்பில் எ.எஸ். ராஜேந்திரன் தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். முன்னாள் விமானப் படை வீரர்கள் நலச் சங்கப் பொறுப்பாளர் சா.வேலுச்சாமி, முன்னாள் ராணுவ வீரர் செல்வராஜ், ஜே.சி.ஐ. அமைப்பின் பொறுப்பாளர் ரத்தீஸ்பாபு உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினர்.   பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
    அகில இந்திய பார்வர்டு பிளாக் (வல்லரசு) சார்பில் பி. இளையரசு உள்ளிட்டோரும் நேதாஜி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai