Enable Javscript for better performance
செல்லிடப்பேசி கடைக்குள் நுழைந்து திருடிய இருவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    செல்லிடப்பேசி கடைக்குள் நுழைந்து திருடிய இருவர் கைது

    By DIN  |   Published on : 22nd October 2017 07:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரையில் பூட்டியிருந்த செல்லிடப்பேசி கடைக்குள் புகுந்து செல்லிடப்பேசிகளைத் திருடிய இருவரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
    மதுரை காஜிமார் தெருவைச் சேர்ந்தவர் முகமது ரஃபீக் (34). பெரியார் பேருந்து நிலையம் அருகே செல்லிடப்பேசி விற்பனை கடை வைத்துள்ளார். இவர் வியாழக்கிழமை இரவு வியாபாரம் முடித்துவிட்டு கடையைப் பூட்டிவிட்டுச் சென்றுள்ளார். வெள்ளிக்கிழமை காலை பார்த்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்ததில், கடையில் இருந்து தலா ரூ. 10 ஆயிரம் மதிப்புள்ள இரண்டு செல்லிடப்பேசிகள் திருடுபோனது தெரியவந்தது. கடையின் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்ததில் கடையில் நுழைந்து இருவர் செல்லிடப்பேசிகளைத் திருடியது தெரியவந்தது.
    இதுதொடர்பாக முகமது ரஃபீக் அளித்த புகாரின் பேரில் திலகர் திடல் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, கண்காணிப்பு கேமரா பதிவுகளில் இருந்த மதுரை பைகாரா பகுதியைச் சேர்ந்த சிவன்ராஜ் மகன் வாசு (20) மற்றும் 16 வயது சிறுவனை கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai