Enable Javscript for better performance
பணியில் உயிரிழந்த காவலர்களுக்கு அஞ்சலி- Dinamani

சுடச்சுட

    

    பணியில் உயிரிழந்த காவலர்களை நினைவுகூரும் வகையில் மதுரையில் சனிக்கிழமை நீத்தார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
    பணியில் இருந்தபோது உயிரிழந்த காவலர்களை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21-ம் தேதி நீத்தார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. மதுரை ஆயுதப்படை மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நீத்தார் நினைவு தின நிகழ்ச்சியில் தென் மண்டல ஐஜி சைலேஷ் குமார் யாதவ், மதுரை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால்,  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.  ஆயுதப் படை மைதானத்தில் உள்ள நினைவுத் தூணில் மலர் வளையம் வைத்து உயிரிழந்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, நடைபெற்ற ரத்ததான முகாமில் காவலர்கள் 118 பேரும், பொதுமக்கள் 60 பேரும் கலந்துகொண்டு ரத்த தானம் வழங்கினர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai