Enable Javscript for better performance
மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் பகுதியில் கழிவு நீர் தேங்குவதால் சுகாதாரச் சீர்கேடு: பொதுமக்கள் புகார்- Dinamani

சுடச்சுட

    

    மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் பகுதியில் கழிவு நீர் தேங்குவதால் சுகாதாரச் சீர்கேடு: பொதுமக்கள் புகார்

    By DIN  |   Published on : 22nd October 2017 07:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலைச் சுற்றிய  சித்திரை வீதி உள்ளிட்ட  பகுதியில் மழைநீர் வடிகால் அமைப்பில் கழிவு நீர் தேங்குவதால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.
    மதுரை மாநகராட்சியில் சிறிய அளவில் மழை பெய்தாலே சாலை மற்றும் சாலையோரப் பள்ளங்களில் தண்ணீர் தேங்குவது வழக்கமாக உள்ளது.  சாலைகளில்
    தேங்கும் தண்ணீர் கழிவுகள் கலந்து சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்துவதாகவும்,  மழை நீர் தேங்குவதால் டெங்கு பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகும் நிலை ஏற்படுவதாகவும் பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.
    கடந்த சில வாரங்களுக்கு முன்பு மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் பகுதியில் பலத்த மழை பெய்தது. அப்போது கோயில் ஆடி வீதியிலிருந்து மழை நீர் கம்பத்தடி மண்டப்பத்துக்குள் புகுந்தது
    பக்தர்களிடையே  அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தூய்மை இந்தியா திட்டத்தில் முதலிடத்துக்கான விருதை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலுக்காக மாநகராட்சி நிர்வாகம் பெற்ற நிலையில்,  கோயிலில் தேங்கும் மழை நீர் வெளியேற வழியில்லாமல் கோயில் பிரகாரங்களுக்குள் சென்றதாக பக்தர்கள் கூறினர்.
    மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சுற்றுப்புற பகுதியில் உள்ள சித்திரை வீதி, ஆவணி மூல வீதிகளில் கழிவு நீர் வெளியேறும் அமைப்பை சரிவர மாநகராட்சி பராமரிக்கவில்லை என்று பக்தர்கள் கூறினர். இதையடுத்து மாநகராட்சி சார்பில் சித்திரை வீதிகளில் மழை நீர்வடிகால் அமைப்பு  சீரமைக்கப்பட்டது. ஆனால்,  மழை நீர் வடிகால் அமைப்பின் மேற்பரப்பில் போடப்பட்ட கற்களை அகற்றிவிட்டு அதை சரிவர மூடவில்லை.  கடந்த 2008-ம் ஆண்டில்  சித்திரை வீதிகளில் சுற்றுலாத் துறை சார்பில் டைல்ஸ் பதிக்கப்பட்டு,  மழை நீர் வடிகால் அமைப்பும்,  மின்சார கம்பிகள், தொலைத் தொடர்பு கேபிள்கள் செல்லவும் அமைப்பு ஏற்படுத்தப்பட்டன. ஆனால், அவை செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை. இதனால், அப்பகுதியில் உள்ள கடைகளின் கழிவு நீரும், குப்பைகளும்
    வடிகால் அமைப்பிலே கொட்டப்படுகின்றன.
    தற்போது மழை நீர் செல்வதற்காக மாநகராட்சி சீரமைப்புப் பணி மேற்கொண்டபோதும்,  மழை நீர் வடிகால் அமைப்பு மேற்பகுதி சிலாப்புகள் பெயர்ந்தெடுக்கப்பட்டன. அதை மீண்டும் சரியாக மூடாததால் அதில் குப்பைகளும், கழிவுநீரும் தேங்கி கொசு உற்பத்தியாவதாக மக்கள் கூறுகின்றனர்.
    கோயிலுக்கு வரும் பக்தர்கள் சித்திரை வீதி,  பூங்கா அருகேயுள்ள தொலைத்தொடர்பு அலுவலகம் எதிரேயுள்ள தனியார் இனிப்பகம்,  உணவு விடுதி ஆகியவற்றிலே உணவு உண்கின்றனர். ஆகவே பக்தர்கள்உணவருந்தும் பகுதியில் சுகாதாரச் சீர்கேடு ஏற்படும் வகையில் உள்ள மழைநீர் வடிகால் அமைப்பை மாநகராட்சி சீரமைக்க வேண்டியது அவசியம் என்பதே மக்கள் கோரிக்கை.
    இதுகுறித்து   மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது,  கடந்த 5-ம் தேதி  மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் பகுதியில் 65 மில்லி மீட்டர் அளவு மழை பெய்தது. இதனால் கோயில் பிரகாரத்தில்
    தண்ணீர் சென்றது. அதை வெளியேற்றுவதற்கே சித்திரை வீதியில் மழை நீர்வடிகால் அமைப்பு கற்கள் பெயர்த்தெடுக்கப்பட்டன. தற்போது டெங்கு பாதிப்பு தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே விரைவில் சித்திரை வீதி மழைநீர் வடிகால் அமைப்புகள் சீரமைக்கப்படும் என்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai