Enable Javscript for better performance
மேலூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் தயாரித்த ராக்கெட் ஏவி சோதனை- Dinamani

சுடச்சுட

    

    மேலூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் தயாரித்த ராக்கெட் ஏவி சோதனை

    By DIN  |   Published on : 22nd October 2017 07:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மேலூரிலுள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் தயாரித்த ராக்கெட்டை சனிக்கிழமை ஏவி சோதனை செய்து பார்த்தனர்.
    மேலூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொழில்நுட்ப மன்றம் உள்ளது. இம் மன்றத்தில் உறுப்பினராக உள்ள மாணவியர் ராக்கெட் ஏவுதல் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர். கடந்த ஆண்டு சோதனைக்காக ஒரு ராக்கெட்டை செய்தனர். ஒன்றரை அடி உயரமுள்ள அந்த ராக்கெட்டில் திரவ எரிபொருள் நிரப்பி சுமார் 10 அடி உயரம் வரை ராக்கெட்டை பறக்க விட்டு சோதனை செய்தனர்.
    சிட்ரிக் அமிலம், சமையல் உப்பு,  தண்ணீரை கலந்து திரவ எரிபொருள் தயாரித்தனர். இதை ராக்கெட்டில் நிரப்பி பறக்க விட்டனர்.  ராக்கெட் சுமார் 10 அடி உயரத்தில் பறந்தது. பள்ளி தலைமை ஆசிரியை டெய்சி நிர்மலாராணி, உதவித் தலைமை ஆசிரியைகள் சுகந்தி, சாந்தி மற்றும் ஆசிரியர்களும் ராக்கெட் தயாரிப்புக் குழுவினரை  பாராட்டினர். ஆசிரியர் சூரியக்குமார் மாணவியர் ஆய்வுக்கு தேவையான ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai