Enable Javscript for better performance
வீடு புகுந்து வெள்ளிப் பொருள்கள், பணம் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    மதுரையில் வீடு புகுந்து வெள்ளிப் பொருள்கள் மற்றும் பணம் திருடிய நபர் மீது போலீஸார் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
    மதுரை கருப்பாயூரணி பாண்டியன் நகரைச் சேர்ந்தவர் ரமேஷ்பாபு (42). இவர் தீபாவளிக்காக திருமங்கலத்தில் உள்ள தனது சகோதரர் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
    இந்நிலையில் வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதாக அக்கம்பக்கத்தினர் அவருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வியாழக்கிழமை இரவு வீட்டிற்கு வந்த ரமேஷ்பாபு உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டில் இருந்த ரூ. 5 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளிப் பொருள்கள் மற்றும் ரூ. 3 ஆயிரம் பணம் திருடு போனது தெரியவந்தது.  இதுதொடர்பாக ரமேஷ்பாபு அளித்த புகாரின் பேரில் அண்ணாநகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai