தேனி மாவட்டம், பெரியகுளம் கோயில் பூசாரி கொலை வழக்கில், புதிய அரசு சிறப்பு வழக்குரைஞரை நியமிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு, தேனி ஆட்சியர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
இதுதொடர்பாக பெரியகுளத்தைச் சேர்ந்த வி.சரவணன் தாக்கல் செய்த மனு: நான், பெரியகுளம் கைலாசநாதர் கோயில் பராமரிப்புக் குழுவின் உறுப்பினராக உள்ளேன். இந்தக் கோயிலில் பூசாரியாகப் பணிபுரிந்து வந்த ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்த நாகமுத்து கடந்த 2012-இல் தற்கொலை செய்துகொண்டார். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக என் மீதும், ஓ.ராஜா (துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர்), பெரியகுளம் மணிமாறன், டி.கல்லுப்பட்டியைச் சேர்ந்த வி.எம்.பாண்டி, பெரியகுளம் தென்கரையைச் சேர்ந்த வி.ஞானம், வி.லோகு ஆகியோர் மீதும் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த பெரியகுளம் டிஎஸ்பி, பெரியகுளம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார். பின்னர் இந்த வழக்கு, திண்டுக்கல்லில் உள்ள வன்கொடுமை வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கில் ஈரோடு மாவட்டம் பவானியைச் சேர்ந்த பி.மோகன், சிறப்பு அரசு வழக்குரைஞராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் 2016 ஜூன் மாதம் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வழக்கில் இருந்து விலகுவதாகவும், அதுதொடர்பாக தேனி மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் நீதிமன்றத்தில் பி.மோகன் தெரிவித்தார். ஆனால், பி.மோகன் தற்போது, வழக்கில் இருந்து விலகுவதாக தெரிவிக்கவில்லை, மீண்டும் தொடர விரும்புவதாகக் கூறி வருகிறார். வழக்கில் இருந்து விலகுவதாக கடிதம் அளித்த நிலையில் மீண்டும் வழக்கில் இணைய முயற்சிப்பது சட்ட விரோதமானது. எனவே, நாகமுத்து தற்கொலை வழக்கில் புதிய அரசு சிறப்பு வழக்குரைஞரை நியமிக்கவும், வழக்கு விசாரணைகளில் பி.மோகன் தலையிடக்கூடாது எனவும் உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதி டி.கிருஷ்ணகுமார் முன், செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, இதுதொடர்பாக தேனி மாவட்ட ஆட்சியர், பெரியகுளம் டிஎஸ்பி, அரசு சிறப்பு வழக்குரைஞர் பி.மோகன் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரியானூா் அருகே கோயிலில் சிலைகள் உடைப்பு: போலீஸாா் விசாரணை
இளைஞா் கொலையில் நண்பா்கள் 6 போ் கைது

அந்நியச் செலாவணி கையிருப்பு 69,069 கோடி டாலராக குறைவு!
கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை
