திருமங்கலம் அருகே திங்கள்கிழமை கல்குவாரியில் வேலை பார்த்தவர் கீழே தவறி விழுந்து உயிரிழந்தார்.
திருமங்கலம் அருகே பெரிய உலகாணியைச் சேர்ந்தவர் வேல்தேவர் மகன் போஸ்(55). இவர் அதே பகுதியில் ஜெயபாண்டி என்பவருக்கு சொந்தமான கல்குவாரியில் பணி செய்து வந்தார். இந்நிலையில் திங்கள்கிழமை பணி செய்யும் போது எதிர்பாராதவிதமாக கீழே தவறி விழுந்தார்.
அதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக அவரது மனைவி அமராவதி அளித்த புகாரின்பேரில் கூடக்கோவில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.