மதுரை மாநகராட்சி ஜீவா நகர் விரிவாக்கப் பகுதியில் சாலைப் பணிகளை மாநகராட்சி ஆணையர் அனீஷ்சேகர் திங்கள்கிழமை ஆய்வு செய்தார்.
மதுரை மண்டலம் 4 (தெற்கு), வார்டு எண் 83 பகுதிக்கு உள்பட்ட பரமேஸ்வரன் பிள்ளை சந்து, பேச்சியம்மன்படித்துறை சந்து மற்றும் தமிழ்ச்சங்கம் சாலை ஆகிய பகுதிகளில் நடைபெற்றுவரும் சாலைப் பணிகளையும், மாநகராட்சி சார்பில் நடைபெற்று வரும் இதரப் பணிகளையும் ஆணையர் அனீஷ் சேகர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதைத்தொடர்ந்து, ஜீவாநகர் விரிவாக்கப் பகுதியான 1 முதல் 3 வரையிலான குறுக்குத் தெருக்கள், ராமையா பிரதான சாலை, முத்துபட்டி பாலாஜி நகர் பிரதான தெரு, முத்துபட்டி-அவனியாபுரம் சாலை ஆகிய பகுதிகளில் தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு வரும் சாலைப் பணிகளை ஆய்வு செய்தார்.
பழங்காநத்தம் ரவுண்டானா பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் பூங்காவையும், அப்பகுதி சாலைகளையும் அனீஷ்சேகர் பார்வையிட்டார். அப்போது, பூங்கா பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளிடம் அவர் அறிவுறுத்தினார். ஆய்வின்போது, உதவி ஆணையர் (மண்டலம் 4 ) பிரேம்குமார், செயற்பொறியாளர் சேகர், உதவி செயற்பொறியாளர் ஆரோக்கிய சேவியர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.