திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியே வெற்றிபெறும் என மதிமுக பொதுச்செயலர் வைகோ தெரிவித்தார்.
சென்னையில் இருந்து திங்கள்கிழமை மதுரை வந்த அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, "திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் அமமுக 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என அக்கட்சியின் துணைப் பொதுச்செயலர் டிடிவி.தினகரன் கூறியது குறித்து கேள்வியெழுப்பப்பட்டது.
இதற்கு பதலளித்த வைகோ, "அவருடைய ஆசையை அவர் தெரிவித்துள்ளார். கருத்து தெரிவிக்க அனைவருக்கும் உரிமை உள்ளது. திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை இடைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியே வெற்றி பெறும்' என்றார்.