மதுரையில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு பல்வேறு இடங்களில் அரசு பேருந்து மீது மர்ம நபர்கள் கல் வீசி தாக்கியதால் பதற்றம் நிலவியது.
கருணாநிதி மறைவையொட்டி மதுரையில் செவ்வாய்க்கிழமை மாலை முதலே பேருந்து போக்குவரத்து படிப்படியாக குறைக்கப்பட்டது.
மேலும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுப்பதற்காக போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் நள்ளிரவில் செல்லூர், நரிமேடு, காளவாசல் ஆகிய இடங்களில் அரசு பேருந்துகள் மீது மர்ம நபர்கள் கல்வீசித் தாக்கினர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.