மதுரை அருகே பெண்ணிடம் நகையை பறித்துச் சென்ற இருவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
மதுரை கருப்பாயூரணி பி.கே.எம். குடியிருப்பைச் சேர்ந்த ஆறுமுகம் மனைவி இந்திரா பிரியதர்ஷினி(29). இவர் செவ்வாய்க்கிழமை கருப்பாயூரணி டென்னிஸ் கிளப் வழியாக குழந்தையுடன் நடந்து சென்றார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மூவர் இந்திரா பிரியதர்ஷினி கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். சம்பவம் தொடர்பாக அவர் அளித்தப் புகாரின்பேரில் கருப்பாயூரணி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் கல்மேடு பகுதியைச் சேர்ந்த தமிழரசன்(19), சிலைமான் புளியங்குளத்தைச் சேர்ந்த வசந்தகுமார்(18), ஆதிஸ்வரன் ஆகிய மூவரும் பறித்துச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து தமிழரசன், வசந்தகுமார் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர். தலைமறைவான ஆதிஸ்வரனை தேடி வருகின்றனர்.