விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

சின்மயா மிஷனின் 20 ஆம் ஆண்டு பகவத்கீதை ஒப்பித்தல் போட்டி

மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் சின்மயா மிஷனின் சார்பில் 20 ஆம் ஆண்டு பள்ளி மாணவர்களுக்கான

Updated On :8 அக்டோபர் 2018, 7:55 am IST

மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் சின்மயா மிஷனின் சார்பில் 20 ஆம் ஆண்டு பள்ளி மாணவர்களுக்கான பகவத்கீதை ஒப்பித்தல் போட்டி பரிசளிப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
 மதுரை சின்மயா மிஷன் சார்பில் எல்.கே.ஜி. முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு பகவத் கீதை ஒப்பித்தல் போட்டியின் முதல் சுற்று கடந்த சில நாள்களுக்கு முன்பு 38 பள்ளிகளில் நடைபெற்றன. ஐந்து பிரிவாக நடைபெற்ற போட்டியில் முதல் மூன்று இடங்களை வகித்த 500 பேருக்கான இறுதிச் சுற்று போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றன.
 போட்டி தொடக்க நிகழ்ச்சிக்கு சின்மயா மிஷன் தலைவர் சுவாமி சிவயோகானந்தா தலைமை வகித்தார். மதுரை கனரா வங்கி பொதுமேலாளர் பரமசிவம் போட்டிகளைத் தொடங்கி வைத்தார். தொழிலதிபர் பரத்கிருஷ்ண சங்கர் சிறப்புரையாற்றினார். இரு பிரிவுகளாக நடந்த போட்டியின் இறுதியில் 45 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் ஒவ்வொரு சுற்றிலும் தேர்வான 3 பேருக்கு தங்க நாணயங்களும், 33 பேருக்கு விலையுயர்ந்த கைக்கடிகாரமும் வழங்கப்பட்டன. மேலும் போட்டிகளில் பங்கேற்றவர்களுக்கு நோட்டு புத்தகங்கள், எழுதுபொருள்கள், பாராட்டுச் சான்றுகள் வழங்கப்பட்டன.
பரிசளிப்பு நிகழ்ச்சியில் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவன அதிகாரி எல்.ரெங்கராஜன் தலைமை வகித்தார். லட்சுமி விலாஸ் வங்கி துணைத்தலைவர் ஆர்.தாமோதரன் ஆகியோர் கலந்துகொண்டு பரிசுகளை வழங்கினர். போட்டிகளுக்கு நடுவர்களாக தியாகராஜர் பொறியியல் கல்லூரி பேராசிரியர் வாசுதேவன், பத்மலட்சுமி சீதாராமன், கீதாபாரதி, சங்கரன் ஆகியோர் இருந்தனர். 
 பரிசளிப்பு நிகழ்ச்சியில் சின்மயாமிஷன் செயலர் கோபால்சாமி, துணைத் தலைவர் திலகர், உறுப்பினர் திருமலையப்பன், சேதுபதி பள்ளித் தலைமை ஆசிரியர் எஸ்.கோபாலகிருஷ்ணன், உதவித்தலைமை ஆசிரியர் நாராயணன், ஆயுர்வேத வைத்தியசாலை ராகவவாரியார்  உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முன்னதாக குககுமாரி வரவேற்றார். சின்மயா மிஷன் உறுப்பினர்  ராமச்சந்திரன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.