Enable Javscript for better performance
கடவுச்சீட்டு விசாரணைக்காக காவலர்களுக்கு புதிய செயலி அறிமுகம்- Dinamani

சுடச்சுட

    

    கடவுச்சீட்டு விசாரணைக்காக காவலர்களுக்கு புதிய செயலி அறிமுகம்

    By DIN  |   Published on : 09th February 2018 08:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கடவுச்சீட்டு தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்துவதற்கு  "எம் பாஸ்போர்ட்' என்ற புதிய செயலியை தென் மண்டலக் காவல்துறைத் தலைவர் சைலேஷ்குமார் யாதவ் வியாழக்கிழமை அறிமுகம் செய்து வைத்தார்.
    இதற்கான தொடக்க விழா மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவில் தென் மண்டலக் காவல்துறைத் தலைவர் சைலேஷ்குமார் யாதவ்,  மண்டல கடவுச் சீட்டு அலுவலர் அருண்பிரசாத், ஊரகக் காவல் கண்காணிப்பாளர் என்.மணிவண்ணன் ஆகியோர் செயலியை அறிமுகம் செய்தனர். 
    இதுகுறித்து சைலேஷ்குமார் யாதவ் கூறியதாவது: கடவுச்சீட்டு கோரி அளிக்கப்படும் விண்ணப்பங்கள் காவல்துறை  விசாரணைக்காக அந்தந்த காவல்நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வந்தது. 
    இதில் விண்ணப்பதாரர் பற்றி விசாரணை நடத்துவதில் காலதாமதம் ஏற்படுவதால் புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக காவலர்களுக்கு புதிய செல்லிடப்பேசியும் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் காலதாமதத்தை தவிர்க்கலாம் என்றார்.
    மண்டல கடவுச்சீட்டு அதிகாரி அருண் பிரசாத் கூறும் போது, கடவுச்சீட்டு  விசாரணையை முடிக்க  போலீஸாருக்கு 21 நாள் அவகாசம் அளிக்கப்படும். ஆனால் தென்மண்டலத்தில் காவல்துறையினரின் சிறப்பான செயல்பாட்டால்  17 நாள்களிலேயே விசாரணையை முடித்து அறிக்கை அனுப்பி விடுகின்றனர். தற்போது "எம் பாஸ்போர்ட்' செயலி மூலம் 12 நாள்களாக அது குறைந்து விடும். முன்பு பெங்களூரு, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களில் மட்டுமே செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது தமிழகத்திலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. செயலியை இயக்குவது குறுத்து மாநகர, ஊரக காவல்துறைக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. ஒரு காவல்நிலையத்தில் 4 காவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்றார். 
    முன்னதாக ஊரக காவல்துறையில் 40 காவல்நிலையங்கள், நகரில் உள்ள 19 காவல் நிலையங்களைச் சேர்ந்த காவலர்களுக்கு "எம் பாஸ்போர்ட்' செயலி அடங்கிய செல்லிடப்பேசி வழங்கப்பட்டது. தொடர்ந்து செயலியை இயக்குவதற்கான பயிற்சியும் அளிக்கப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai