Enable Javscript for better performance
கிரானைட் அதிபர் வீட்டில் 45 பவுன் நகை, ரூ.6 லட்சம் திருட்டு: இளைஞரிடம் விசாரணை- Dinamani

சுடச்சுட

    

    கிரானைட் அதிபர் வீட்டில் 45 பவுன் நகை, ரூ.6 லட்சம் திருட்டு: இளைஞரிடம் விசாரணை

    By DIN  |   Published on : 09th February 2018 08:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரையில் கிரானைட் தொழிலதிபர் வீட்டில் புதன்கிழமை நள்ளிரவு 45 பவுன் நகை, ரூ. 6 லட்சம் பணத்தை திருடிக் கொண்டு தப்பிச் சென்ற இருவரை போலீஸார் தேடி வருவதுடன், கையும் களவுமாக பிடிபட்ட நபரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
     மதுரை தாசில்தார் நகர் தாகூர் வீதியைச் சேர்ந்தவர் முகேஷ்குமார். கிரானைட் தொழில் நடத்தி வருகிறார். இவர் தனது குடும்பத்தினருடன் சொக்கிக்குளம் வணிக வளாகத்தில் உள்ள திரையரங்கில் படம் பார்த்து விட்டு புதன்கிழமை நள்ளிரவு வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்ததையடுத்து உள்ளே சென்று பார்த்த போது, 3 மர்ம நபர்கள் பொருள்களைத் திருடிக் கொண்டிருப்பதைக் கண்டு முகேஷ்குமார் சத்தம் போட்டார்.  அதில் இருவர், முகேஷ்குமாரை தள்ளிவிட்டு மூட்டையுடன் தப்பிச் சென்றனர். மூன்றாவது நபர் தப்பிச் செல்ல முயன்ற போது அவரை முகேஷ்குமார் மற்றும் குடும்பத்தினர் மடக்கிப் பிடித்தனர். இதையடுத்து அங்கு வந்த அண்ணாநகர் போலீஸார்,  பிடிபட்ட நபரை காவல்நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர். இதில் தப்பிச் சென்ற இருவர் மற்றும் பிடிபட்டவர் உள்பட மூவரும் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்தவர்கள் என்பதும்,  பூட்டிய வீடுகளைக் குறிவைத்து திருடும் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரிந்தது.  மேலும் முகேஷ்குமார் வீட்டில் திருடிய 45 பவுன் நகை மற்றும் ரூ.6 லட்சம் பணத்தை தப்பிச் சென்ற இருவர் கொண்டு சென்றதும் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அவர்களைப் பிடிக்கத் தனிப்படை போலீஸார் கமுதி விரைந்துள்ளதாகக் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai