Enable Javscript for better performance
கீழே விழுந்து கணவர்  இறந்த அதிர்ச்சியில்  மனைவியும் சாவு- Dinamani

சுடச்சுட

    

    கீழே விழுந்து கணவர்  இறந்த அதிர்ச்சியில்  மனைவியும் சாவு

    By DIN  |   Published on : 09th February 2018 08:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரை செல்லூரில் கணவர் கீழே விழுந்து இறந்த அதிர்ச்சியில் மனைவியும் வியாழக்கிழமை உயிரிழந்தார்.
        மதுரை செல்லூர் அறுபதடி சாலை பகுதியில் முத்துராமலிங்கம் நகர் இரண்டாவது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ் (54). டீக்கடை மாஸ்டர். போதைக்கு அடிமையானவர். இவரது மனைவி பாண்டியம்மாள் (52). இவர் நோயால் பாதிக்கப்பட்டு வீட்டிலிருந்த படியே மருந்துகள் சாப்பிட்டு வந்தார். இவர்களுக்கு 3 மகன்கள். அனைவரும் தனித்தனியாக வசிப்பதால், செல்வராஜும், பாண்டியம்மாளும் மட்டும் தனியாக வசித்தனர். இந்நிலையில் செல்வராஜ் வியாழக்கிழமை காலையில் கழிப்பறை அருகே தடுமாறி விழுந்து இறந்துள்ளார். இதை படுத்த படுக்கையாகக் கிடந்த பாண்டியம்மாள் பார்த்து அதிர்ச்சியில் அவரும் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
        தகவலறிந்த செல்லூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று இருவரது சடலங்களையும் கைப்பற்றினர். பின்னர் சந்தேக மரணமாக வழக்குப்பதிந்து இருவரது சடலங்களையும் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு  அனுப்பிவைத்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai