Enable Javscript for better performance
பேரவை  மதிப்பீட்டுக் குழு இன்று மதுரையில் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    சட்டப் பேரவை மதிப்பீட்டுக் குழு, மதுரை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (பிப்.9) ஆய்வு செய்ய உள்ளது.
     தமிழக சட்டப் பேரவை  மதிப்பீட்டுக் குழுவின் தலைவர் பி.எம்.நரசிம்மன் தலைமையில் 18 உறுப்பினர்கள் அடங்கிய குழு மதுரை மாவட்டத்துக்கு வெள்ளிக்கிழமை வருகிறது.  
     ஆதிதிராவிடர் நலன், பொது சுகாதாரம், மருத்துவம் மற்றும் ஊரகப் பணிகள், நகராட்சி நிர்வாகம், பள்ளிக் கல்வி, சமூக நலம் உள்ளிட்ட துறைகளில் 2016-2017 ஆம் ஆண்டின் பல்வேறு திட்டப் பணிகளை நேரில் பார்வையிட்டு இக்குழு ஆய்வு  செய்கிறது. பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அத்துறைகளின் அலுவலர்களுடன் கலந்தாய்வு செய்கிறது.
       மதுரை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai