Enable Javscript for better performance
மாநில ஹாக்கி: இன்று கால் இறுதிப் போட்டி- Dinamani

சுடச்சுட

    

    திருநகர் ஹாக்கி கிளப் சார்பில் நடைபெற்று வரும் மாநில அளவிலான ஹாக்கிப் போட்டியில் கால் இறுதி ஆட்டம் வெள்ளிக்கிழமை (பிப். 9) நடைபெறுகிறது.
       திருநகர் அண்ணா பூங்காவில் பி.ஜெ.பி.எம் நினைவு மாநில அளவிலான 19 ஆம் ஆண்டு ஹாக்கி போட்டி கடந்த 4 ஆம் தேதி தொடங்கியது. நாக் அவுட் முறையில் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. மதுரை, திண்டுக்கல், திருச்சி, சென்னை, சிவகாசி உள்ளிட்ட தமிழகமெங்கும் இருந்து 30 அணிகள் பங்கேற்றன. இதில் கடந்த ஆண்டு முதல் நான்கு இடத்தில் வெற்றி பெற்ற திருநகர் ஹாக்கி கிளப் அணி, தமிழ்நாடு ஸ்டேட் போலீஸ் அணி, சென்னை சிட்டி போலீஸ் அணி, கோவை ஹாக்கி கிளப் அணிகள் நேரடியாக கால் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. 
     மேலும் வியாழக்கிழமை நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்று மதுரை ஜி.கே.மோட்டார் அணி, கோவில்பட்டி ஹாக்கி எக்சலன்ஸ் அணி, சென்னை இந்தியன் வங்கி அணி, மதுரை சவுத் ஜோன் போலீஸ் அணி ஆகிய நான்கு அணிகளும் கால் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.   இந்த 8 அணிகளும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள கால் இறுதிப் போட்டியில் மோதுகின்றன. போட்டிக்கான ஏற்பாடுகளை திருநகர் ஹாக்கி கிளப் செயலர் ஆர்.ரமேஷ் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai