Enable Javscript for better performance
மீனாட்சியம்மன் கோயில் தீ விபத்து: ஆட்சியருக்கு, திமுக எம்எல்ஏ 65 கேள்விகள்- Dinamani

சுடச்சுட

    

    மீனாட்சியம்மன் கோயில் தீ விபத்து: ஆட்சியருக்கு, திமுக எம்எல்ஏ 65 கேள்விகள் 

    By DIN  |   Published on : 09th February 2018 08:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக 65 கேள்விகளுக்கு பதில் தருமாறு  மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர்,  கோயில் இணை ஆணையர் ஆகியோருக்கு மதுரை மத்திய சட்டப் பேரவை உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன்  கடிதம் அனுப்பியுள்ளார்.
     மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் தீ விபத்து குறித்து விரிவான ஆய்வறிக்கையை வெளியிடுவேன் என ஏற்கெனவே அவர் கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர், கோயில் இணை ஆணையர் ஆகியோருக்கு வியாழக்கிழமை அனுப்பியுள்ள கடிதத்தில் 65 கேள்விகளுக்குப் பதில் அளிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.  தீ விபத்து,  மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலின் பாதுகாப்பு, கோயிலில் செயல்படும் கடைகள், விபத்து மேலாண்மை என 4 தலைப்புகளில் கேள்விகளுக்கு பதில் தருமாறு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
     மேலும், எனது கடிதத்துக்கு பதில் கிடைக்கும் என நம்புகிறேன். பதில் தராவிட்டாலும்,  இந்த கேள்விகளின் அடிப்படையில் ஆய்வுக் குழு விசாரணை நடத்தினால் உண்மை நிலையை அறியலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai