Enable Javscript for better performance
வணிக நிறுவனங்களின் உரிமத்தை புதுப்பிக்க பிப்.28 வரை அவகாசம்- Dinamani

சுடச்சுட

    

    வணிக நிறுவனங்களின் உரிமத்தை புதுப்பிக்க பிப்.28 வரை அவகாசம்

    By DIN  |   Published on : 09th February 2018 08:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரையில் வணிக நிறுவனங்களின் உரிமத்தை புதுப்பிக்க வரும் 28  ஆம் தேதி (புதன்கிழமை) வரை கால அவகாசம் தரப்பட்டுள்ளது.
     இதுகுறித்து மாநகராட்சி தனி அலுவலரும், ஆணையருமான அனீஷ்சேகர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 
        மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து வணிக நிறுவனங்களும் டி அண்ட் ஓ உரிமமானது மாநகராட்சி மூலம் வழங்கப்பட்டு வருகிறது. அந்த உரிமத்தை புதுப்பித்தலுக்கான காலம் வரும் 14 ஆம் தேதி (புதன்கிழமை) வரை என அறிவிக்கப்பட்டிருந்தது. 
       இந்நிலையில் அக்கால அவகாசம் பிப். 28 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே கால நீட்டிப்பை பயன்படுத்தி மாநகராட்சியின் மைய அலுவலகம் மற்றும் நான்கு மண்டல அலுவலகங்களிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அனைத்து வேலை நாள்களிலும் கட்டணத்தை நேரடியாகச் செலுத்தி அதற்கான ரசீதுடன் இணைத்து புதுப்பித்தல் படிவத்தை பூர்த்தி செய்து வார்டு சுகாதார ஆய்வாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.  அதனடிப்படையில் உரிமங்கள் புதுப்பிக்கப்படும். 
      தொழில் வரி, சொத்து வரி, திடக்கழிவு  மேலாண்மை பயன்பாட்டுக் கட்டணம் ஆகியவற்றை நிலுவையின்றி செலுத்தினால் மட்டும் தான் உரிமங்கள் புதுப்பிக்கப்படும்.
      உரிமங்கள் புதுப்பிக்கப்படாத வணிக நிறுவனங்கள் மீது மதுரை மாநகராட்சியின் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai