Enable Javscript for better performance
வருவாய்த் துறையினர் 2-ஆம் நாளாக விடுப்பு எடுக்கும் போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    வருவாய்த் துறையினர் 2-ஆம் நாளாக விடுப்பு எடுக்கும் போராட்டம்

    By DIN  |   Published on : 09th February 2018 08:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தினர் இரண்டாம் நாளாக வியாழக்கிழமையும் தற்செயல் விடுப்பு எடுக்கும் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.
      காலிப் பணியிடங்களை நிரப்புதல், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்தல், வருவாய்த்துறை அலுவலர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இரு நாள்கள் தற்செயல் விடுப்பு எடுக்கும் போராட்டத்தை புதன்கிழமை தொடங்கினர். இந்நிலையில் இரண்டாவது நாளான வியாழக்கிழமையும் வருவாய்த் துறை அலுவலர்கள் 300-க்கும் மேற்பட்டோர் இப்போராட்டத்தில் பங்கேற்றனர். இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் சிவக்குமார் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் வி.பாண்டி முன்னிலை வகித்தார். மாநிலச் செயலர் எம்.பி.முருகையன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai