Enable Javscript for better performance
இளைஞர், மாணவர்கள் தண்டால் சாதனை முயற்சி- Dinamani

சுடச்சுட

    

    மதுரையில் இளைஞர் மற்றும் இரு பள்ளி மாணவர்கள் தண்டால் சாதனை முயற்சியில் ஈடுபட்டதையடுத்து, அவர்களுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கி பாராட்டப்பட்டனர்.
    சுழற்சங்கம் (மதுரை வடக்கு) சார்பில் நவரத்னா திறமைக்கு அங்கீகாரம் எனும் தலைப்பில் மதுரையில் உடற்பயிற்சியில் சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சுழற்சங்க மாவட்டத் தலைவர் சுரேந்திரன், நவரத்னா திட்ட இயக்குநர் பாஸ்கரன், செயலர் சபரிநாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    சிவகங்கை அபூர்வா உடற்பயிற்சியாளர் நலச்சங்கத் தலைவர் நிமலன் மேற்பார்வையில் ரகுடேவிட்சன் இரண்டு டீ தம்ளர்களில் கைகளை வைத்தும், மற்றொரு கண்ணாடி தம்ளரில் கால்களை வைத்தும் 36 வினாடிகளில் 50 தண்டால் எடுத்தார்.
    எம்.தருண்பிரபு என்ற பள்ளி மாணவர் 3 நிமிடங்களில் 220 ஸ்குவாட் எடுத்து, முந்தைய சாதனையாக கூறப்படும் 3 நிமிடங்களில் 206 ஸ்குவாட் என்பதை முறியடித்தார். எஸ்.பி.மகிபாலன் என்ற பள்ளி மாணவர் நான்கு சில்வர் தம்ளர்களில் கை, கால்களை வைத்து கைகளை திருப்பி மணிக்கட்டுகளில் வைத்து 60 தண்டால் எடுத்தார்.
    சாதித்த மாணவர்களுக்கு சுழற்சங்கம் சார்பில் ரொக்கப் பரிசுகள் மற்றும் சான்றுகள் வழங்கப்பட்டன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai